உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே மஹாந்த் கங்காஹர் காட் என்ற பகுதியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் CCTV கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடை மாற்றும் அறையில் உள்ள அலமாரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பெண்கள் சிலர் பார்த்து புகார் அளித்தனர்.

இதுகுறித்து நடத்திய விசாரணையில், சிசிடிவி கேமரா பொருத்திய குற்றவாளியை கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் தொலைபேசியில் 320 வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.