
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. ஹினெளடா என்ற கிராமத்தில் நில தகராறு காரணமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே ஆகிய இரு பெண்கள் மீது டிப்பர் லாரி ஒன்று மண்ணை கொட்டியது. மண்ணில் பாதி புதைந்த பெண்களை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
ஒரு பெண் இடுப்பு வரையிலும் மற்றொரு பெண் கழுத்து வரையிலும் மண் குவியலில் சிக்கிக் கொண்டனர். இதில் பெண் ஒருவரை சுயநினைவை இழந்தார். உள்ளூர் வாசிகளால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.