திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் காளீஸ்வரன் என்பவர் வசித்து வந்துட்டார். இவர் விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இந்த நிலையில் காளீஸ்வரன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 3  சிறுவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த காளீஸ்வரனின் மனைவி தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காளீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பெண்கள் முன்னிலையில் மோசமான வார்த்தைகளால் பேசியதை காளீஸ்வரன் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். இதனால் 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.