
உத்திர பிரதேசம் மாநிலம் முன்னாள் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீசார் அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் பிணையில் அந்த இளைஞர் வெளியே வந்துள்ளார். அப்பொழுது திடீரென்று காதலியின் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் பெண்ணின் தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . பின்னர் அந்த இளைஞரும் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார்.