தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த 2003ஆம் வருடம் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்து பின் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது 22 வருடங்களுக்கு பிறகு அதர்வா நடிக்கும் “இதய முரளி” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் குறித்து இவர் கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “திருமணம் செய்து கொள் என்று நான் யாருக்குமே பரிந்துரைப்பது கிடையாது. ஏனென்றால் திருமணத்தை காப்பாற்றுவது தற்போது கடினமாகிக் கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். அதுதான் இதற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.