
சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூசாரி ஆக முனுசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மீது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது பூசாரியுடன் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி வந்த நிலையில் ஒருநாள் தீர்த்தம் என கூறி அவருக்கு ஏதோ ஒரு மயக்க மருந்தை கலந்து கொடுத்து கற்பழித்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட முனுசாமி அவரை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து முனுசாமியை தேடி வந்தனர். இதற்கிடையில் அவரை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் முனுசாமி மீது லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று முனுசாமி கைது செய்துள்ளனர். மேலும் அவரை தற்போது சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.