கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!! கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது மருமகன் சஞ்சய் ராயை தூக்கிலிட வேண்டுமென அவரது மாமியார் கோரிக்கை விடுத்துள்ளார். சஞ்சய் தனது மகளை அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த கொடூரச் செயலை சஞ்சய் தனியாக செய்திருக்க முடியாது என்றும், அவனுக்கு பின்னால் அதிகாரம் படைத்த பலர் இருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ள இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சஞ்சய் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்துள்ள போலீசார், இந்த வழக்கில் இன்னும் பலர் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் இந்த வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவர் தனது வாழ்க்கையை இழந்த சம்பவம் மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் தண்டனை பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்