ஜப்பானில் தற்போது ஒரு மிகவும் தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது, ஆனால் இதில் கணக்குத் தொடங்குவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் சிறுவர்களுக்கே அனுமதி உள்ளது.

குழந்தைகள் தங்களுக்கே உரிய பாங்கிங் அனுபவத்தை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியில், சிறுவர்கள் தாங்கள் நேரடியாக ஆவணங்களை பூர்த்தி செய்து, ஏ.டி.எம் கார்டுகளை பெறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சேமிக்கும் தொகைக்கு வட்டி வருமானமும் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் வங்கி வளாகத்திற்குள் நுழைய கூட அனுமதி இல்லை.

இந்த சிறப்பு வங்கிக் கொள்கை, குழந்தைகளுக்குக் குறைந்த வயதிலிருந்தே நிதி நிர்வாக அறிவை வளர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வங்கி முறையைப் பற்றி செயலில் கற்றுக்கொள்வதற்கான இந்த வாய்ப்பு, சிறுவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தையும், பணம் பற்றிய பொறுப்பையும் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

குழந்தைகள் தங்களது சொந்த சேமிப்புத் திட்டங்களை உருவாக்கி, வட்டி பெறும் அனுபவத்தையும் நேரில் காண்கிறார்கள்.

பெற்றோர்களின் தலையீடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் பண நிதி நிர்வாகத்தை கற்றுக்கொள்வது, அவர்களது எதிர்கால நிதி நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் என்பதே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.