இப்படியே பெரியாரைப் பற்றி பேசினால் இன்னும் கொஞ்ச நஞ்சம் இருப்பவர்களும் நாதக கட்சியை விட்டு போய் விடுவார்கள் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார்.

விடுதலை தமிழ் புலிகள் கட்சியை நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மூன்று இடங்களில் பேசவிடாமல் விரட்டியடித்து துரத்தினார்கள். எனவே எங்களை பெரியார் பெயரைச் சொல்லி 232 வாக்குகள் தான் பெற்றுள்ளோம் என்று கூறுவதற்கு உங்களுக்கு அருகதையே கிடையாது.

பெரியாரை அவமதிக்கும் நோக்கத்திலும், இழிவுபடுத்தும் நோக்கத்திலும் அவர் குறித்த கட்டுக்கதைகளை சீமான் சொன்னார். நாம் தமிழர் கட்சியை பெரியார் மண்ணான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியுற செய்ய வேண்டும் என்பதற்காக அங்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சி வேட்பாளர் வெண்ணிலா, பெரியார் பெருந்தொண்டர்கள் தமிழ் தேசியம் ஆதரவோடு போட்டியிட்டார்கள்.  ஆனால் நாங்கள் நாம் தமிழர் கட்சியை தோற்கடித்து விட்டோம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் கண்ணில் படவே இல்லை என்று கூறியுள்ளீர்கள். உங்கள் அலுவலகத்திற்கு எதிரில் தான் பெரியார் படத்தை வைத்து எங்கள் அலுவலகம் செயல்பட்டது. எப்போது எங்களை பற்றி அச்சப்படுகிறீர்களோ, கவலைப்படுகிறீர்களோ, பேசுகிறீர்களோ அப்போது நாங்கள் வென்று விட்டோம். தொடர்ந்து இப்படியே பெரியாரைப் பற்றி பேசினால் இன்னும் கொஞ்ச நஞ்சம் இருப்பவர்களும் உங்களை விட்டு வெளியே போய்விடுவார்கள்.