என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமானால் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் பேசியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் கருத்தை கூறுவதற்கு ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்புவதற்காக 40 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியாவின் வரி வருவாய் ஒதுக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது நான் முதலமைச்சரானால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றால் மாநில அரசின் சார்பில் வரி கொடுக்க மாட்டேன். திமுக அரசிடம் கறை இருப்பதால் தான் மத்திய அரசோடு சண்டை போட முடியவில்லை என்று சொல்பவர்கள் பல நூறு கோடி ரூபாயை தேர்தலுக்கு செலவழிக்கிறார்கள்.

பெரியாருக்கு யாரும் வாக்களிக்கவில்லை. காந்திக்கு தான் வாக்களித்துள்ளார்கள். எனக்கு தொண்டை சரியில்லாமல் போய்விட்டது. இல்லாவிட்டால் பெரியார் குறித்து இன்னும் பேசியிருப்பேன். ஈழத்தில் எம்ஜிஆர் படம் இருந்தது ஆனால் அங்கு பெரியார் படம் இல்லை.

விடுதலைப்புலிகள் சாக வேண்டும் என்று நினைத்தது திராவிடம். பிரபாகரன் உள்ளிட்ட உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். அவரை எதிர்ப்பேன். பெரியார் எங்களுக்கு தேவையில்லை. எனக்கு தேவையில்லை. என்னை பின்பற்றுபவர்களுக்கு பெரியார் தான் வேண்டுமானால் என்னை விட்டு விலகி செல்லலாம்” என்று பேசியுள்ளார்.