
நான் இப்போதுதான் பெரியாரை பத்தி பேச தொடங்கியிருக்கிறேன் இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் என்று சீமான் பேசியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகளே டெபாசிட் இழந்துள்ளார்கள். பாஜக வாக்குகள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது என்று சொல்வது மிகவும் தவறானது . பாஜகவும் அதிமுகவும் நாங்க வளர வேண்டும் என்று எப்படி நினைப்பார்கள்.
என்னுடைய கோட்பாட்டின்படி நான் தனித்து நிற்பேன். இந்த தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் ஊக்கமடைந்துள்ளார்கள். நான் திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் எதிரானவன் என்னை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாக சொல்வது யூகம் தான். ஊழல். லஞ்சம் இல்லாத ஒரு நாடாக டென்மார்க், நியூசிலாந்து போன்ற பல நாடுகள் உள்ளது. காமராஜர், அண்ணா, ராஜாஜி ஆகியோர் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள்ளார்கள்.
பெரியார் குறித்து நான் ஓவராக பேசி விட்டேன் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன். இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். தற்போது தான் நான் ஒரு தெளிவிற்கு வந்துள்ளேன். பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என்று தெரிந்த பின்பு எதிர்க்க வேண்டிய நிலை வந்துள்ளது”என்று பேசியுள்ளார்.