நம் பூமியை 70 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் கழிவுகளை உள்வாங்கி இந்த பூமி பாதுகாப்போடு இயங்குவதற்கு எந்த அளவுக்கு கடல் உதவி செய்கிறது என்ற விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகிறார்கள். நம் பூமியை கடல் சூழ்ந்ததற்கான காரணம் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகிவிட்ட சூழலிலும் அதிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு மூலமாக காற்று மாசடைவதோடு அதில் பூமியின் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. அதேசமயம் பசுமை இல்ல வாயுக்களாலும் புவி வெப்பமயமாதல் நடைபெறுகின்றது.

இதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன. இது பூமி கடலால் மூழ்கடிக்கப்படும் என்பதை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டு கடல் மட்டத்தை அளவிடும் முறை தொடங்கிய நிலையில் அப்போதிலிருந்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 32 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அங்குலம் அதாவது 10 சென்டிமீட்டர் வரை உயர்ந்துள்ளது. கடலில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் உயர்வதோடு சூரிய வெப்பத்தால் கடல் நீர் விரிவடைந்து அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றது. இதுதான் அடிக்கடி கடலோரப் பகுதிகளில் வெள்ளம் வர முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.