
வேலூர் மாவட்டத்தில் உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுநீரகம், கணையம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து சிறிமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.