
துபாயில் இடம்பெற்ற கொடூர சம்பவத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டு நபர் ஒருவரால் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அஷ்டபு பிரேம்சாகர் (நிர்மல் மாவட்டம்) மற்றும் ஸ்ரீனிவாஸ் (நிஜாமபாத் மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொலையின் காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும், துபாய் போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளன ர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில் வெளியுறவு அமைச்சகம் செயல்படும் என ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மேலும், விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை விரைவில் தேசத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நீதிக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.