தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுத்தாயாவுக்குப் பள்ளிப் சுற்றுலாவுக்காக சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது,. பேருந்தில் 44 பேர் இருந்த நிலையில், 23 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்து கு கோட் நகரின் ஜீர் ரங்சித் பகுதியில் பஹோன் யோதின் சாலையில் சென்றபோது, நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.

பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கி கொண்ட நிலையில், மீதமுள்ளவர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்தின் காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களும், ஆசிரியர்களும் திரும்பிவராததை அறிந்த பிறகு, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அதற்கான அதிகாரிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்திற்கு தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்திருக்கிறார்.