
சுவிட்சர்லாந்தின் கிகிஹகன்சன்(95) முதல் உலக அழகி பட்டம் வென்றவர். கடந்த 1951 ஆம் ஆண்டு லண்டனில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் கிகிஹகன்சன். அப்போது அவருக்கு வயது 22. கடந்த நான்காம் தேதி இரவு தூக்கத்திலேயே கிகிஹகன்சன் உயிர் பிரிந்து விட்டது இது குறித்து உலக அழகி போட்டியை நடத்தும் அமைப்பு தெரிவித்தது. கிகிஹகன்சனின் மகனும் தனது தாய் இறந்ததை உறுதி செய்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.