
பொலிவியாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல்துறை தகவலின்படி, அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது சுமார் 2,625 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. பொலிவியாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள யோகல்லா நகரில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா போன்ற பகுதிகளில், சாலை போக்குவரத்து விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணமாக, பல சாலைகள் மலைகளிலும் உயரமான குன்றுகளிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கூர்மையான திருப்புகளுடன் கூடிய மலைச்சாலைகளில், ஒரு சிறிய தவறுதலே பேரழிவுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் பெரியவர்கள், 4பேர் குழந்தைகள் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் அண்மையில், குவாத்தமாலாவில் இதேபோன்ற ஒரு பேருந்து விபத்தில் 55 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.