சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே அக்கரை பேட்டை கிராமம் உள்ளது. இங்கு ரவி (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு மாதம்மாள் (30) என்ற மனைவியும், மனோரஞ்சனி என்ற 7 வயது மகளும், நித்யஸ்ரீ என்ற 3 வயது மகளும் இருந்துள்ளனர். இதில் மனோரஞ்சனி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தவர் ஏற்பட்டு வந்த நிலையில், மனோரஞ்சினி தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்ற நிலையில் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ரவி கடந்த 23ஆம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் அவருடைய மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.