வந்தவாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குணசீலன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.  வந்தவாசி திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட குணசீலன் அபாரமாக வெற்றி பெற்றார். குணசீலன் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

குணசீலன் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். அவர் மீது மக்களுக்கு அதீத அன்பு உள்ளது. அவரது மறைவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.