சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சென்னைக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் வாணியம்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வேன் டிரைவர் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் கார்த்திக் ஆட்டோவை நிறுத்த பிரேக் பிடித்துள்ளார். அதே சமயம் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஷேர் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ஷேர் ஆட்டோ முன்னால் நின்ற வேன் மீது மோதியது.

இந்த இடிபாடுகளில் சிக்கி நிஜதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.