சென்னை மாவட்டம் மூட்டைக்காரன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் தாமோதரன்(24) திருப்போரூர் காயார் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் பாட்டி உயிரிழந்ததால் தாமோதரன் மோட்டார் சைக்கிளில் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை திருப்போரூர் கோயில் குளத்தில் தாமோதரன் சடலமாக மிதந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற தாமோதரன் மதுபோதையில் குளத்தில் இறங்கி குளித்ததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.