பிரபல நடிகையான சமந்தா விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் சமந்தா நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இதனை தொடர்ந்து சமந்தா மையோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்று சமந்தாவின் தந்தை உயிரிழந்து விட்டார். அதை குறிக்கும் விதமாக சமந்தா தனது சோசியல் மீடியா பக்கத்தில் until we meet again dad என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.