
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் தாய் கிம் பெர்னாண்டஸ் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில வாரமாகவே கிம் பெர்னாண்டஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.