
பிரபல இயக்குனரும் நடிகருமான, நாகேந்திரன் இன்று காலமானார். இவர் சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் ரிலீசான காவல் திரைப்படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
தற்போது நாகேந்திரன் உயிரிழந்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்ட செய்தியால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அவரது இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.