
திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேனரின் மேல் பக்கத்தில் கயிறு கட்டுவதற்கு லோகேஷும், தனுஷ் குமாரும் மின்மாற்றில் ஏறியுள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.