துருக்கியைச் சேர்ந்த எபெகான் குல்தூர் என்ற பெண் டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவர் சாப்பாடுகளை உண்டு வீடியோ பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக எபெகான் குல்தூர் ஏழாம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 24 வயது தான் ஆகிறது. கடந்த மூன்று மாதங்களாக எபெகான் குல்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல் பருமன் தொடர்புடைய பல்வேறு மருத்துவ பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

எபெகான் குல்தூர் அக்டோபர் 15-ஆம் தேதி பதிவிட்ட கடைசி வீடியோவில் உணவில் அதிக உப்பு சேர்ப்பதை குறைத்து இருக்கிறேன். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்கிறேன் என கூறியிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமாகி பல பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)