
ராஜஸ்தான் மாநிலம் தீஜ் மாவட்டத்தில் 13 மாத குழந்தை ஒன்று தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது அப்போது குடும்பத்தினர் அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பின் அருகே சென்றது.
அங்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத சமயத்தில் பால் பாத்திரத்தை குழந்தை தட்டி விட கொதித்துக் கொண்டிருந்த பால் குழந்தையின் மீது சிந்தியுள்ளது. இதனால் உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பெற்றோரின் அலட்சியமும் குழந்தையின் இறப்பிற்கு காரணம் என்று கூறலாம். பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எந்நேரமும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.