சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின் உடலை அவரது பெற்றோர் 8 கிலோ மீட்டர் தேடி அலைந்தனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.