
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் திரவ நைட்ரஜன் பான் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதனை சாப்பிட்டவுடன் சிறுமியின் வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு வயிற்றில் துளை ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் சிக்கலை தடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கண்ட மருத்துவர்கள் குறைந்த வளைவில் 4×5 சென்டிமீட்டர் அளவுள்ள வயிற்றின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. தமிழகத்தில் திரவ நைட்ரஜன் பயன்பாட்டுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.