தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளம் மூலமாக ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது.

இதன் மூலமாக மாணவர்களின் மதிப்பெண் மற்றும் பள்ளி சார்ந்த தகவல்கள் அனைத்தும் பெற்றோருக்கு எஸ் எம் எஸ் மூலமாக தெரியப்படுத்தப்படும். இதற்காக பெற்றோரின் செல்போன் எண்களை சரிபார்க்க ஓடிபி அனுப்பப்படுகிறது. அச்சமடையாமல் பள்ளி ஆசிரியர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பெற்றோர்கள் ஓடிபி எண்ணை பகிர்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.