அசாம் மாநில அரசு தனது ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வருகின்ற நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக பயன்படுத்த முடியாது எனவும் பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புகளை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் பணியாளர்கள் படிப்படியாக இதை பெறலாம் எனவும் பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள் எனவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.