பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய குடும்ப வன்முறை சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலீமுல்லா என்ற நபர், தனது மனைவி மேஹ்ருனிசாவை மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டார். அதுவும், அவர்களது பிள்ளைகள் முன்னிலையில் இந்த கொடூர செயல் நிகழ்ந்தது. அவரது மனைவி தரையில் விழுந்த பிறகும் அடித்துக்கொண்டே இருந்தார். இந்த சம்பவத்தை அருகில் வசிக்கும் நபர்கள் செல்போனில்  வீடியோவாக பதிவு செய்துள்ளனர், ஆனால் அதனை அவர்கள் தடுக்கவில்லை என்பதே மிகவும் வேதனையானது. கலீமுல்லா தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மேஹ்ருனிசா, கலீமுல்லாவின் பெரிய சகோதரரின் மனைவியாக இருந்தார். அவரின் மரணத்துக்குப் பின் கலீமுல்லாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேஹ்ருனிசாவின் முந்தைய திருமணத்தில் பிறந்த இரு மகன்கள் தாய்வழி பாட்டி-தாத்தாவுடன் வசித்து வருகிறார்கள். கலீமுல்லா போதை பழக்கம் மற்றும் வன்முறை நடத்தும் பழக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கிடையே நீண்டகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் கலீமுல்லா திருமண நிகழ்ச்சி ஒன்றில்அழைத்ததால் மேஹ்ருனிசா தாய்வீட்டில் இருந்து மீண்டும் வந்திருந்தார்.

அதன் பிறகு அவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறுகள் என்பது நடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றும் பலன் இல்லை. மேலும் இந்த நிலையில் தான் அவர் தன்னுடைய மகன்கள் கண்முன்னே தெருவில் போட்டு தன் மனைவியை கொடூரமாக அடித்துக் கொண்டுள்ளார். அவரை தற்போது போலீசார் தொலைபேசி தேடி வரும் நிலையில் இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.