கரூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்க்கும் நிலையில் இரண்டு மனைவிகள். இவர் தன் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி காவல் நிலையத்தில் தன்னுடைய தந்தை கடந்த சில மாதங்களாக  தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் செல்வராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் செல்வராஜுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும் என்று உத்தரவு தீர்ப்பு வழங்கியுள்ளது.