திருச்சி பெல் வளாகத்தில் இயங்கும் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, சம்பளத்துக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.43 கோடியை மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கண்ணாடி ஜன்னல் வழியாக உள்நுழைந்து திருடிச் சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் பெல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். எனினும், பல ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு முக்கியமான தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தற்போது, இவ்வழக்கில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட வழக்கில் ஒருவர் போலீசாரின் கண்களில் சிக்கியுள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் வழியாக, இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் நபர்கள்  குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.