
சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது போதையில் இருந்துள்ளார்.
அங்கு அவர் சிப்ஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கினார். பின் அங்கிருந்து காசு கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளார். இதனால் சிவகுமார் அவரிடம் காசு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால், கோபமடைந்த பன்னீர்செல்வம் கடையை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து சிவகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.