சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் டீப்தி ரஞ்சன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு கட்டப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன் தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அந்த பெண் ஒரு மாதமாக அவருடன் சரிவர பேசாமல் இருந்ததாலும் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.