பேடிஎம் நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமலும் மற்றும் பரிவர்த்தனை எதுவும் செய்யப்படாத பேடிஎம் வாலட்டுகள் வருகிற ஜூலை 20 முதல் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு முப்பது நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்பாக அதில் உள்ள பணத்தை பயன்படுத்திக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாலட்டை மூடுவதற்கு பேடிஎம் செயலியில் Paytm Payments Bank Wallet என்பதை கிளிக் செய்து ”I want to close my Wallet”  என்பதை கிளிக் செய்து என்பதை தேர்ந்தெடுத்தால் வாலட் இரண்டு நாட்களுக்குள்ளாக மூடப்பட்டு விடும்.