டெல்லி கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய பிரிவு கைது செய்தது. ஜூன் இரண்டாம் தேதி முதல் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டிருந்த திகார் சிறையில் இந்த கைதானது நடந்தது. கெஜ்ரிவாலுக்கு மூன்று நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்  திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சிறை அதிகாரிகள் தனது பெல்ட்டை எடுத்துக்கொண்டதால், பேண்ட்டை கையால் பிடித்து நடக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், இந்த தர்மசங்கடத்தை புரிந்துகொண்டு விதியில் தளர்வளிக்க வேண்டுமென்றார். இந்த கோரிக்கையை ஏற்று, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.