
விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சூரியகுமார்(24). இவர் தனது தந்தை ஆசீர்வாதம் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய மல்லாங்கிணறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலரான கரைமேலு(46) என்பவர் 6000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகையை தன்னால் கொடுக்க முடியாது என சூரியகுமார் கூறிய பிறகு 3500 பணம் கொடுத்தால் பெயர் மாற்றத்தை தருவதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து சூரியகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சூர்ய குமார் கரைமேலுவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கரைமேலுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.