கேரளாவில் பேருந்து நடத்துனர் ஒருவர் பயணியின் உயிரை காப்பாற்றியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பேருந்தில் நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் எதையும் பிடிக்காமல் டிக்கெட் வாங்கினார்.

அப்போது திடீரென அந்த பயணி பேருந்தில் இருந்து கீழே விழப் பார்த்தார். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட நடத்துனர் அவரின் கையைப் பிடித்து மேலே இழுத்து உயிரை காப்பாற்றினார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடத்துனரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.