
டெல்லி மெட்ரோ ரயில்களுக்குள் சமீப காலமாக நடைபெறும் சண்டைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி அரசு பேருந்தில் இரண்டு பெண் பயணிகளுக்கு இடையே முடியை பிடித்து இழுக்கும் அளவிற்கான சண்டை வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பேருந்தில் இருக்கைக்காக போட்டியிடும் இரண்டு பெண்களுக்கு இடையே நடைபெறும் கடுமையான வாக்குவாதத்தை வீடியோ எடுத்து ஒருவர் வெளியிட்டுள்ளார். இதனிடையே சக பேருந்து பயணிகள் தலையிட்டு சண்டையை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
வீடியோவில் பெண் பயணி ஒருவர் மற்றொரு பெண் பயணியின் மடியில் அமர்ந்து இருக்கைக்காக அவருடன் சண்டை போடுகிறார். மற்றொரு பயணி தலையிட்டு அவர் செய்வதை தடுக்கும் நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் முடியை இழுக்க தொடங்கி சண்டை போடுகின்றனர். இறுதியாக இரு பெண்களும் சண்டையை நிறுத்தாமல் இருக்கையை விட்டு வெளியேறுகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kalesh b/w Two Woman inside Delhi Government Bus over Seat issues pic.twitter.com/M1CWkaU5Xx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 26, 2023