
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, பேருந்தில் பெண்கள் செல்லும்போது சிலர் தவறான முறையில் பார்ப்பதோடு பாலியல் சீண்டலிலும் ஈடுபடுவார்கள்.
நான் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் தான் செல்வேன். நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நடுத்தர வயது நபர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் கோபத்தில் அவரை ஒரு குத்து விட்டேன். நான் அடித்தவுடன் அந்த நபர் பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்று விட்டார். மேலும் அந்த சமயத்தில் பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்கு ஆதரவாக வரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.