கர்நாடகாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (KSRTC) பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கண்டக்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் முத்திபு – ஸ்டேட் பாங்க் பாதையில் இயங்கும் பேருந்தில் மங்களூரு அருகே புதன்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்த மற்றொரு பயணி இந்த சம்பவத்தை செல்போன் கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அதன்படி, பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் காசப்ப நாயகர் (வயது 35) என்பவர் அந்த ஒப்பந்தக் கண்டக்டராக அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், அந்த இளம்பெண் தூங்குவதை பயன்படுத்திக் கொண்டு, பிரதீப் நாயகர் அவரை தகாத முறையில் தொடுவதும், தொடர்ந்து தொந்தரவு செய்வதும் தெளிவாக காணப்படுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்தனர். இதைத்தொடர்ந்துகொனாஜே காவல்துறையினர் அவரை வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.