
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவக்கோடி குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ரியாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர்.
இதனால் பேருந்து மலைப்பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 33 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.