
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.