
பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான அதுல் சுபாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி நிகிதா மற்றும் நிகிதாவின் குடும்பத்தினர் சேர்ந்து சுபாஷ் மீது போலியான வழக்குகள் கொடுத்ததும் அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதும் தான் தற்கொலைக்கான காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சுபாஷின் தந்தை தனது பேரனை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். சுபாஷ் தந்தை பவன் மோடி கூறுகையில் “எனது பேரனை ஒரே ஒரு முறை தான் வீடியோ காலில் பார்த்தேன். அவனது பாதுகாப்பை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது. எனது பேரன் இருக்கும் இடம் எதற்காக ரகசியமாக வைக்கப்படுகிறது.
இரண்டு வயது குழந்தையை எந்த விடுதியில் சேர்த்து இருப்பார்கள் என்று ஆதங்கத்தோட கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தனது பேரக்குழந்தை கிடைக்காவிட்டால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.