டெல்லியில் உள்ள பறக்கும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதில் ஹீரா சிங் (40) மற்றும் அவருடைய மனைவி சிம்ரன்ஜீத் கவுர் (30) ஆகிய 2 பேரும் பைக்கில் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  இவர்களுடைய பைக் மற்றொரு பைக்கின் மீது மோதுவது போல் சென்றது.

இதனால் இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.இவர்களுடைய பைக் மற்றொரு பைக்கின் மீது மோதுவது போல் சென்றது. இதனால் இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இது உன்னுடைய தவறு , பைக்கில் இவ்வாறு தான் போவியா..என்று இருவரும் மாறி மாறி பேச தகராறு முற்றியது.

அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டார். அதில் சிம்ரன்ஜீத் கவுரி கழுத்துக்கு அருகே குண்டு பாய்ந்தது. உடனே சிம்ரன்ஜீத் கவுரி சரிந்து கீழே விழுந்தார். அதன் பின் கணவர் ஹீரா சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிம்ரன்ஜீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஹீரா சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.