உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம் நவ்கவான் பகுதியில் ஏப்ரல் 4ஆம் தேதி பெட்ரோல் பங்க் பணியாளரிடம் திடீரென கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், பெட்ரோல் நிரப்புவதாகச் சொல்லி பம்பில் நுழைந்தனர். பணியாளர் பணத்தை எண்ணும் தருணத்தில், பின்புறத்தில் அமர்ந்திருந்த நபர் பணத்தை பறிக்க முயன்றார். ஆனால் பணியாளர் அதனை தடுக்க, அவர் கையை பிடித்துவிட்டார். இதையடுத்து வாகனம் நிலை தவறி விழுந்தது. உடனே மற்ற ஊழியர்கள் விரைந்து வந்து இருவரையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jist (@jist.news)

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், Danish மற்றும் Farman எனும் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு Isapur கிராமத்தில் இரண்டு திருட்டுகளில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் எண் பலகை இல்லாததும், அது போலீசார் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த வீடியோதற்போது சமூக வைளதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை வைரலாகி வருகிறது.