
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது அவர் ஆட்சி செய்யும் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூயார்க் டைம்ஸ் நவ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களை பாதுகாப்பு படையினர் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சிறைகள் கண்ணாடிகளின் வீடு என்று அழைக்கப்படுகிறது. அ
தாவது அந்த சிறையில் இருப்பவர்களை தவிர வேறு வெளி ஆட்களை பார்க்க முடியாது. அவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த சிறையில் இருந்தவர்கள் தங்கள் இருக்கும் பகுதிகளுக்கு மேல் இராணுவத்தினர் அணிவகுத்து செல்வது தங்களுக்கு கேட்டதாக கூறுகிறார்கள். ஷேக் ஹசீனா ஆட்சியில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டவர்களில் இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மனித உரிமைகள் ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டு துண்டுகளாக்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு கண்ணாடிகளின் சிறைகளில் அவர்களை அடைத்து வைத்து மேலே பெரிய மின்விசிறிகளை ஓடவிட்டுள்ளனர். அதாவது அங்குள்ள காவலர்கள் பேசுவது கைதிகளுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர். ஒரு சிறிய போராட்டத்தில் அரசுக்கு எதிராக ஈடுபட்டால் கூட அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கண்ணாடிகளின் வீடு சிறையில் இருப்பவர்களுக்கு 4 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுகாதார பரிசோதனை செய்யப்படுவதோடு 6 மாதங்களுக்கு ஒரு முறை முடி வெட்டி விடப்பட்டுள்ளது.
இது அவர்களை பைத்தியமாக்கும் செயல்முறை என்று கூறப்படுகிறது. அதாவது ஒருவரைக்கு ஒருவர் பார்க்காமல் பேசாமல் வைப்பதால் அவர்கள் பைத்தியமாகும் எனக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த சிறையில் ஜன்னல்கள் இல்லாததோடு வெளிஉலகை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கறிஞர் அகமது பின் காசிம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் 8 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் முதல் முறையாக புதிய காற்றை சுவாசிப்பதாகவும் தான் சிறையில் இருக்கும் போது கொல்லப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் சிறையில் எந்த நேரமும் கை விலங்கு போடப்பட்டிருந்தது எனவும் வெளி உலகத்தை அங்கிருந்து தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நாட்டினை வழிநடத்தும் பெண் தலைவராக இருந்த போதிலும் அவர் இதுபோன்ற கட்டுப்பாடான விஷயங்களை வைத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
