கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு வாலிபர் பயணம் செய்தார். அவர் அரக்கோணத்தில் ரயிலில் தவறவிட்ட பையை எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி அந்த வாலிபர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.